மனிதவளம்தனியார்பொதுத் துறைகளுக்கிடையிலான பாலம் ; அதிகளவில் எதிர்பார்க்கப்பட்ட தேசிய  HR  மாநாடு  2018 ஜுன் 6 மற்றும் 7ஆம் திகதிகளில் 

IPM சிறிலங்கா  – மனிதவள முகாமைத்துவத்தில் இலங்கையின் முன்னணி நிறுவனம்- அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட அதன் நிகழ்வு  பற்றிய அறிவித்தலை விடுத்தது – IPM  தேசிய மனிதவள மாநாடு 2018 ஜுன் மாதம் 6ஆம் திகதி புதன்கிழமை மற்றும் 7 ஆம் திகதி வியாழக்கிழமை ஆகிய இரு தினங்களில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் “டிஜிற்றல் உலகுக்கேற்ப HR இன் மாற்றம்” எனும் தொனிப்பொருளில் நடைபெறும். .

IPM  இன் இந்த தேசிய HR மாநாடானது, தெற்காசியாவிலேயே மிகப்பெரிய மாநாடாகக் கருதப்படுகின்றது. இம் மாநாட்டுக்கு உள்ளுர் மற்றும் வெளியூர் பங்கேற்பாளர்கள் 1000 பேர்வரை கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது. IPM NHRC 2018 க்கான பிரதம விருந்தினராக தொலைத்தொடர்பு மற்றும் டிஜிற்றல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ கலந்துகொள்வார்.

இந்நிகழ்வில் தலைமை உரையை இலங்கை மற்றும் மாலைதீவூக்கான HSBC யின் பிரதம நிறைவேற்றதிகாரி திரு மாரக் .ஜீ. புரொதேரோ வழங்குவார். அன்றைய நிகழ்வில் பங்கேற்க வுள்ள புகழ்பெற்ற பேச்சாளரகளின் வரிசையில்,  டாக்டர் கசொள யானோ ( டிஜிற்றல் மயமாக்கம் மூலம் வேலைத்தள மகிழ்ச்சி), டாக்டர் தனுஷ்க பொலேகல்ல (டிஜிற்றல் யுகத்தில் மனிதவள செயற்பாடுகளின் மாற்றம்), டாக்டர் .டி. பிரசாந்த் நாயர், (மனிதவளங்களில் உணரத்தக்க செயற்கை நுண்ணறி வு) மற்றும் திருமதி க்ளொடியா கெடேனா (டிஜிற்றல் பணிச்சூழலில் மக்களை ஒழுங்குபடுத்துதலும் வலுவூட்டலும்)  ஆகியோர் மாநாட்டின் பல் தொழில்நுட்ப அமர்வூகளில் தங்கள் கருத்துக்களை யும் அனுபவங்களை யும் பகிர்ந்துகொள்வர். ஓவ்வோர் அமர்வின் பின்னருமான கேள்வி பதில் நிகழ் வு பார்வையாளர்கள் தங்களது சந்தேகங்களைக கேட்டு தெரிந்துகொள்ளும் அரிய சந்தர்ப்பத்தினையும் பேச்சாளர்களிடம் பார்வையாளர்கள் தங்கள் சொந்தக் கேள்விகளைக் கேட்கக்கூடிய வாய்ப்பினையும் தருகின்றது.

காலத்துக்குப் பொருத்தமான தலைப்பான “டிஜிற்றல் உலகில் HR இன் எதிர்காலம்” எனும் தலைப்பிலான முதலாவது குழுநிலை விவாதம், திரு ஜயந்த ஜயரத்னவினால் வழிநடத்தப்படும். விவாதக்குழுவில் திரு சேமேஷ்தாஸ் குப்தா- தலைவர் NIPM இந்தியா, திரு. கன்வர்.ஏ சகீட்- துணைத் தலைவர் PSHRM பாகிஸ்தான், திரு.மஸராப் ஹொஸெயின் – தலைவர்  BSHRM பங்களாதேஷ், திரு.அரசேந்திரன் ஜெகந்நாத நாயுடு- தலைவர், MIHRM மலேசியா  மற்றும்  பேராசிரியர் அஜந்தா தர்மசிறி – தலைவர்  IPM இலங்கை.

இரண்டாவது குழு நிலை விவாதம், “டிஜிற்றல் உலகில் கைத்தொழில் / ஊழியர் உற வுகள் நிலைமாறுதல்” எனும் தலைப்பில் இடம்பெறும் இவ்விவாதமானது, Tropical Findings (Pvt) Ltd இன் நிறைவேற்றுப் பொது முகாமையாளர் திரு தம்மிக்க  பெர்ணான்டோவினால் வழிநடத்தப்படும்.  இவ் விவாதக் குழுவில்,  Employers’ Federation of Ceylon இன் சிரேஷ்ட துணைப் பணிப்பாளர் நாயகமும் சட்ட நடவடிக்கைகளுக்கான தலைவருமான திரு. டித்தா  டி அல்விஸ்,  கொழும்புப் பல்கலைக்கழக சட்ட பீட சிரேஷ்ட விரி வுரையாளரும், சட்ட ஆராய்ச்சி அலகின் பணிப்பாளருமான திரு ஏ. சர்வேஸ்வர ன், Labour Enforcement இன் பிரதி ஆணையாளர் திரு மிலங்கா வீரக்கொடி ஆகியோர் பங்குகொள்வர்

இதுதொடர்பில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் IPM Sri Lanka வின் தலைவர் பேராசிரியர் அஜந்த தர்மசிறி உரையாற்றுகையில், ‘டிஜிற்றல் உலகுக்கேற்ப HR  இன் மாற்றம்’ எனும் தொனிப்பொருளானது, புதியதோர் உலகில் வாழ்ந்துவரும் இலங்கைக்கு மிகப் பொருத்தமானது. – டிஜிற்றல் உலகானது தொடர்ச்சியாகப புத்தாக்கமடைந்து, மனித வாழ்க்கை முறையில், நம்பிக்கைகளில், நடத்தைகளில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றது.”

“இவ்வருட மாநாட்டின் தொனிப்பொருளானது, ‘டிஜிற்றல் உலகுக்கேற்ப HR  இன் மாற்றம்” என்பதாக அமைவதோடு டிஜிற்றல் மயமாக்கத்தினால் மாற்றமடைந்து வரும் HR  துறைக்கேற்றவகையில் அத்துறை சார்ந்தோரை அறிவூட்டுவதை மையமாகக் கொண்டிருக்கின்றது. டிஜிற்றல் மயமாக்கம் மற்றும் கலாசார  மற்றும் தலைமுறை இடைவெளி கொண்ட தொழிலாளர் படையணி, திறமைகளுக்கான தேடல், வாடிக்கையாளர் தேவைகள் போன்றவற்றால் இது மேலும் சிக்கல்தன்மை வாய்ந்ததாக வுள்ளது.” என்றார் NHRC 2018 இன் தலைவர்  பிரியங்கர செனிவிரத்ன

அனைவராலும் அதிகளவில் எதிர்பார்க்கப்பட்ட வருடாந்த நிகழ்வானது தேசிய HR கண்காட்சி யுடன் இணைந்ததாகவே இம்முறை நடத்தப்படுகின்றது. பாரிய மனிதவள செயற்பாடுகள், பாரிய மனிதவள விருதுகள், பாரிய மனிதவள விவாதங்கள் என்பன 2018 ஜுன் மாதம் 6 ஆம் 7ஆம் திகதிகளில் பண்டாரநாயக்க  மாநா ட்டு மண்டபத்தில் இடம்பெற வுள்ளன. இளம் தலைiமுறையினரிடையே மனிதவள முகாமை த்துவத்தின் முக்கியத்துவத்தினை உணர்த்தும் வகையில், ‘Battle of the Brains’ எனும் பாடசாலைகளுக்கிடையிலான விவாதப்போட்டியின் மாபெரும் இறுதிச் சுற்று ஆனந்தா கல்லூரியில் ஏப்ரல் 3 ஆம் திகதி இடம்பெற்றது.

IPM இன் பிரதம செற்பாட்டு அதிகாரி திரு.பீ. ஜீ. தென்னக்கோன்,  IPM சார்பாக அனைத்து பங்காளர்களுக்கும் தனது உளம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

“இத்தருணத்தில் நான் IPM இன் தலைவர், கவூன்ஸில் உறப்பினர்கள், பிரதம நிறைவேற்றதிகாரி, மற்றும் ஊழியர்கள், துணை நிகழ் வுகளுக்கான குழுக்களின் தலைவர் ஆகியோருக்கு அவர்களது அர்ப்பணிப்புகாக வும் அயராத பங்களிப்புக்காக வும், ஆதர வுக்காக வும் இவ்வாறானதொரு முதல்தர தொழில்நுட்ப மாநாட்டினை ஒழுங்கு செய்தமைக்காக வும், சகல பங்கேற்பாளர்களுக்கும் இனிமையான சமூக ரீதியான அனுபவங்களைத் தந்தமைக்காக வும் இச்சந்தர்ப்பத்தில்  நனறி கூறக் கடமைப்பட்டுள்ளேன். அத்துடன் இந்நிகழ் வுக்கு ஆதரளித்து, தேசிய மனித வள மாநாடு குறித்து பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவதிலும் இம்மாநாடு வெற்றிபெறுவதிலும்  முன்னின்ற ஊடகத்துறையினருக்கும் எனது நன்றிகள்”

1959 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட  Personnel Management Sri Lanka (IPM )( 1976 ஆம் ஆண்டின் பாராளுமன்றச் சட்டத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட ஒரு தொழில்சார் நிறுவனமாகும். IPM ஆனது Asia Pacific Federation of Human Resource Management உடனும்  World Federation of Personnel Management Associations. உடனும் இணைக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *