1993ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பயோ ஃபுட்ஸ் (பிறைவட்) லிமிடட் இரசாயனங்கள் நிறைந்த விவசாயக் கலாசாரத்தை மாற்றி இரசாயனம் அற்ற இயற்கை பயிர் அறுவடையை ஆரம்பித்திருந்தது. இது விவசாயிகளை நியாயமான முறையில் நடத்தும் வர்த்தக முறையை உள்ளடக்கியூள்ளது. அவர்கள் தரமான வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வதற்கு உதவியாக சந்தைப் பெறுமதியைவிட மேலதிக கொடுப்பனவூகளை வழங்குவதுடன் எந்தப் போகமாகவிருந்தாலும் அவர்களின் உற்பத்திச் செலவை ஈடுசெய்யக் கூடிய வகையிலான விலையை வழங்குவது என்ற நடைமுறைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்தக் கம்பனியானது தொலைநோக்குப் பார்வையைக் கொண்ட நிறுவூனரும் தலைவருமான (டொக்டர்) ஆனந்த சரத் ரணவீரவால் கண்டியை தளமாகக் கொண்டு ஏற்றுமதிக்கான குடும்ப வியாபாரமாக ஆரம்பிக்கப்பட்டு 25 வருடங்களாக வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. இன்று இந்த நிறுவனம் உலகில் முன்னணியான இயற்கை உயிரியலான இயற்கையான நியாயமான விவசாய வர்த்தகமாக வளர்ச்சியடைந்துள்ளது.

25வருட பூர்த்தி கொண்டாடும் நிலையில் தேயிலை வாசனைத் திரவியங்கள் மற்றும் தெங்கு உற்பத்தியில் முன்னணி ஏற்றுமதியாளர்களாக அவர்கள் பரிணமித்துள்ளனர். விலை ஏற்ற இறக்கம் மற்றும் இடைத்தரகர்களால் தமது விவசாயிகள் பாதிக்கப்படுவதிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் ஆரம்பத்திலிருந்தே (சர்வதேச ஒழுங்குறுத்தும் நிறுவனம்இ பெயார்ட்ரேட் லேபலிங் ஒர்கனைசேஷன் ஆகியன அமைக்கப்பட முன்னர்) பயோ ஃபுட்ஸ் நியாயமான வர்த்தக தரத்தை
நடைமுறைப்படுத்திவருகிறது. இது அவர்களை ஏனையவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காண்பிப்பதுடன் நவீன நிலைபேறான விவசாயத்தின் முன்னணியாளர்களாகவூம் ஆக்கியூள்ளது. அவர்களின் வணிக மாதிரியின் செயற்பாடானது சான்றிதழ் அளிக்கப்பட்ட தமது சொந்த பொதியிடல் பிரிவூகளுக்கு இலங்கையின் பின்தங்கிய பகுதிகளில் உள்ள ஒடுக்கப்பட்ட விவசாயிகளுக்கு நேரடியாக பயிற்சிகள் வழங்கி சான்றிதழ் அளித்து உள்வாங்குவதில் ஆரம்பமாகிறது. விவசாயிகள் மட்டத்திலிருந்து பெறுமதி சேர்க்கப்பட்ட இறுதி உற்பத்திவரை வெளிப்படையான மற்றும் நிலைபேறான வகையில் சகல செயற்பாடுகளையூம் முகாமைத்துவம் செய்யூம் தனியான கம்பனியாக விளங்குவது வழமைக்கு மாறானதாக அமைந்துள்ளது.

தற்பொழுது வாழ்ந்துவரும் எதிர்காலத்தில் வாழப்போகும் அனைத்து உயிரினங்களுக்கும் சுத்தமான காற்று நீர் மற்றும் மண்ணை வழங்குவது என்ற உன்னதமான குறிக்கோளுக்கு அமைய பயோ ஃபுட்ஸ் எப்பொழுதும் தூய்மையான விவசாய இரசாயனம் சேர்க்கப்படாத உற்பத்திகளில் நம்பிக்கை கொண்டுள்ளது. இதற்கான அர்ப்பணிப்புக்காகவே அவர்கள் உலகில் எந்த கம்பனியாகவிருந்தாலும் அவற்றின் சர்வதேச சான்றிதழைக் கொண்டுள்ளனர். சர்வதேச ஒழுங்குபடுத்தல் அமைப்பினால் நடத்தப்படும் வருடாந்த கணக்காய்வூகள் மற்றும் ஆய்வூகளின் மூலம் உரிய அடிப்படைகள் கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்பன இந்த சான்றிதழ்கள் மூலம் உறுதிப்படுத்தப்படுகின்றன. இது அதிகாரிகளால் இன்னமும் ஒன்றிணைக்கப்படாத தரத்தைப் பேணும் நடவடிக்கையாகும். ‘சான்றிதழ் அளிக்கப்பட்ட இயற்கை’ உற்பத்தி என அழைக்கப்படுவதற்கு உற்பத்தியின் சகல மட்டங்கள்இ பொதியிடல் விநியோகம் உள்ளிட்ட சகல செயற்பாடுகளிலும் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகள்
பின்பற்றப்பட வேண்டும். இது குறித்த சான்றிதழ் சரியான முறையில் பின்பற்றப்படுகின்றது என்பதை உறுதிப்படுத்துவதுடன் சான்றிதழ் அளிக்கப்பட்ட இயற்கை உற்பத்தியைத்தான் கொள்வனவூ செய்கின்றோம் என்ற நம்பிக்கையை வாடிக்கையாளர்களுக்குக் ஏற்படுத்துகிறது.

இந்த நோக்கம் மற்றும் நெறிமுறைக்கான நீண்டகால அர்ப்பணிப்புக் காரணமாக பயோ ஃபுட்ஸின் நிறுவூனரும் தலைவருமான டொக்டர்.ரணவீர வேர்ல்ட் பெயார்ட்ரேட் லேபலிங் ஒர்கனைசேஷானால் வழங்கப்படும் ‘உலகின் சிறந்த நியாயமான வர்த்தகத்துக்கான’ விருதை முதலாவதாகப் பெற்றுக்கொண்டார். ஜேர்மனியின் பொன்
நகரில் 2014ஆம் ஆண்டு இந்த விருது வழங்கப்பட்டதுடன் உலகின் நியாயமான வர்த்தக முறையைப் பின்பற்றிய 80 போட்டியாளர்கள் மத்தியில் இந்த விருதை அவர் பெற்றுக் கொண்டமையானது இலங்கைக்கு பெருமைய ஏற்படுத்தும் தருணமாகவூம் அமைந்தது. அதேநேரம் ஒதுக்கப்பட்ட இயற்கை உற்பத்தியாளர்கள் சம்மேளனம் தலைவரால் உருவாக்கப்பட்டதுடன் 2014ஆம் ஆண்டு ஆசியாவின் சிறந்த சிறிய உற்பத்தியாளர் அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டது. ஒதுக்கப்படட் இயற்கை உற்பத்தியாளர்கள் சம்மேளனம் 7400 விவசாய குடும்பங்களின் ஒத்துழைப்புடன் சர்வதேச சான்றளிக்கப்பட்ட இயற்கை மற்றும் நியாயமான வர்த்தக உயிரியல் இயக்காற்றல் உள்ள உணவூகளை பயோ ஃபுட்ஸ் ஊடாகக் கொண்டுவந்துள்ளதுடன் கடந்த 25 வருடங்களாக அவற்றின் சிறந்த ஏற்றுமதியாளராகவூம் திகழ்கிறது. இயற்கை உணவூ தொடர்பான ஏற்றுமதி சான்றிதழ் பெற்ற முதலாவது கம்பனியாகவூம் பயோ ஃபுட்ஸ் காணப்படுகிறது. உலக சனத்தொகையில் பெரும்பாலானவர்கள் தமது உடல் நலன் குறித்து விழிப்புணர்வூ அடைந்திருப்பதால் இயற்கை உணவூ தொடர்பான சந்தை விஸ்தரித்திருப்பதுடன் அதிகரித்துள்ள கேள்விக்கு ஏற்ப ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள பாரிய இயற்கை உணவூ வர்த்தக நாமங்களுக்கு தொடர்ச்சியான விநியோகத்தராகவூம் காணப்படுகிறது.

25 வருட பூர்த்தியென்ற மைல்கல்லை கொண்டாடுவதன் ஒரு அங்கமாக பயோ ஃபுட்ஸ் தனது வர்த்தக நாமத்தில் பரந்துபட்ட உற்பத்திகளை சந்தையில் அறிமுகப்படுத்துகிறது. சிறந்த உற்பத்திகளை உருவாக்கிய மக்களுக்கே மீண்டும் அவற்றை வழங்க வேண்டும் என்ற தலைவரின் புத்தாக்கத்துக்கு அமையவே இவை அறிமுகப்படுத்தப்படுகின்றன. இவ்வாறு அறிமுகப்படுத்தப்படும் உற்பத்திகள் சுகாதார அக்கறைகொண்ட நெறிமுறையான நோக்கம் கொண்ட இலங்கை வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் தேயிலைகள் மூலிகைகள் பழங்கள் மரக்கறிகள் மற்றும் தென்னை உற்பத்திகள் போன்றவற்றில் காணப்படுகின்றன. இந்த உற்பத்திகளை சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் திட்டங்களையூம் அவர்கள் அறிமுகப்படுத்தியூள்ளனர்.

அவர்களின் இந்த 25 வருட வெற்றிப் பயணம் பல்வேறு அடையாளங்களைக் கொண்டுள்ளது. முதலாவது வர்த்தக நாமம் என்பதற்கு மேலதிகமாக அவர்கள் அண்மையில் உலகின் முதலாவது சமூக சுற்றுச்சூழல் வங்கியான ஜேர்மனியின் ஜீ.எல்.எஸ் வங்கியின் பங்குதாரராகவூம் இணைந்துள்ளனர். சுற்றுச்சூழலில் சாதகமானதாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய திட்டங்களிலேயே இந்த வங்கி எப்பொழுதும் முதலீடுகளைச் செய்வதுடன்இ புதுப்பிக்கத்தக்க சக்தி முதலீடுகளுக்கு நிதியூதவி அளிப்பதிலும் முன்னணியாகத் திகழ்கிறது. இதற்கு மேலதிகமாக இயற்கை விதை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறையை அடிப்படையாகக் கொண்ட ‘த சீட் ஃபண்ட்’ போன்ற விவசாய வர்த்தகங்களுக்கும் அவர்கள் நிதியூதவி வழங்கி வருகின்றனர்.
ஜீ.எல்.எஸ் ஆனது நல்ல விளைவூகளை ஏற்படுத்தும் செயற்றிட்டங்களுக்கு நிதி நன்கொடைகளை வழங்குவதில் நம்பிக்கையை கட்டியெழுப்பியிருப்பதுடன் சமூகப் பொறுப்பை மனதில் நிறுத்தி இயற்கையான கம்பனிகள் மற்றும் திட்டங்களிலும் அவர்கள் முதலீடு செய்துள்ளனர். பயோ புட்ஸின் நேரடியான சமூகத் தாக்கத்தினால் பெரும் எண்ணிக்கையான விவசாயிகள் நன்மையடைவதைக் கவனத்தில் கொண்டு ஐரோப்பாவூக்கு வெளியே இலங்கையில் முதலீடுசெய்வதற்கு ஜீ.எல்.எஸ் வங்கி தீர்மானித்தது. பயோ ஃபுட்ஸஷுக்கும் ஜீ.எல்.எஸ் வங்கிக்கும் இடையிலான இந்தப் புதிய பங்குடமையானது சிறந்த குறிக்கோளாக அமைந்துள்ளது. இரு தரப்பும் இணைந்து அறக்கட்டளையொன்றை உருவாக்கியிருப்பதுடன் வருடாந்த லாபப் பங்கின் ஒருபகுதியை கிராமப் பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் அவர்களின் பிள்ளைகளை அறிவூட்டுவற்கு செலவிடவூம் தீர்மானித்துள்ளனர். மக்களிடமிருந்து பிரித்து எடுத்துவிட முடியாதஇ எதிர்கால சந்ததிக்கு கடத்தக் கூடிய விடயமான அறிவூ+ட்டல் பற்றிய முடிவையே எடுத்துள்ளனர். இந்தப் பங்குடமையானது பயோ ஃபுட்ஸை இயற்கை மற்றும் நிலைபேறான விவசாயத் துறையில் உலகின் முன்னணி நிறுவனமாக மாற்றுவதற்கு அழகான வழியை ஏற்படுத்துவதற்கான வழியை ஏற்படுத்தும் என்ற உறுதிமொழியை வழங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *